Thamizhar Thiruvizha on Kovai

கோவையில் பிரம்மாண்ட ‘தமிழர் திருவிழா’ கோவை மாநகரிலே ஒரு பெருவிழா..!

பண்டைத் தமிழர்களின் வீரத்துக்கும், விவேகத்துக்கும் கட்டியம் கூறும் விழா; அவர்தம் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழா; விளையாட்டுத் திருவிழா; வீரத் திருவிழா; பொங்கல் நல்விழா..!

ஜனவரி: 13, 14, 15
3 நாட்கள் சிறப்பு திருவிழா

கால்நடை கண்காட்சி:

நாட்டுமாடுகள், நாட்டுநாய்கள், நாட்டுக்குதிரைகள், சண்டக்கிடா, சண்டைசேவல். இவற்றுடன் தமிழர்போர்க் கருவிகள்.

பாரம்பரிய விளையாட்டுகள்:

சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக்கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லாசுத்துதல், உண்டிவில், ஸ்லோசைக்கிள், கில்லிதான்டி, நொண்டி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம் இன்னும் பல. . .

பாரம்பரிய நிகழ்ச்சிகள்:

கரகாட்டம், ஒயிலாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், துடும்பாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், கும்மியாட்டம், சலங்கை ஆட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதம், கொக்கலி, மல்லர்கம்பம், கயிர்க்கம்பம், தெருக்கூத்து இத்துடன் இன்னும் பெருமை சேர்க்க வில்லுப்பாட்டு, கிராமியப்பாட்டு.

மேலும்:

மட்பாண்டம் செய்தல், மஞ்சநீர், கிளிஜோசியும், அம்மிஅரைத்தல், உலக்கைக்குத்துதல், சாணம்தட்டுதல், கடைவீதியுடன் கூடிய கிராமிய உணவு வகைகள்.

சிறப்பு சாதனை முயற்சி:

ஒரே இடத்தில 2500 பேர் பொங்கல் வைப்பது. விருப்பம் உடையோர் ஜனவரி 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், கிராமிய நாட்டுப்புற கலைகளை கண்டுரசிக்க; கலைஞர்களின் கரங்களுக்கு வலிமை சேர்க்க; அவர்தம் வாழ்வில் வசந்தம் வீச; வளமை சேர ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் அணி திரண்டு வாரீர்…! வாரீர்…!சங்கமிப்போம், சரித்திரம் படைப்போம்!

நாள்:ஜனவரி 13,14,15
இடம்:ராதாகிருஷ்ண மில்ஸ் வளாகம் (PSG Tech கல்லூரி அருகில்) கோவை.
நேரம்:காலை 10 முதல் – மாலை 9 வரை.

அனுமதி: நபருக்கு 100 ரூபாய்
(பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்)
*பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்துடன் வாரீர் *

தொடர்புக்கு:
நயம் எக்ஸ்பிரியன்ஸ்
9677715916, 9677715915
[email protected]
www.nayamexperience.com

தமிழர் திருவிழா, இது நம்விழா…!

2 Replies to "Thamizhar Thiruvizha on Kovai"


    Got something to say?